விலங்குகளை காப்பாற்ற முயன்ற இலங்கை பெண் - இஸ்ரேலின் தாக்குதலில் பரிதாபமாக பலி
லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ரஹ்மா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
அப்பகுதியில் நிலவி வரும் கடுமையான போர்க் சூழலிலும் அந்தப் பெண் நாட்டை விட்டு வெளியேற மறுத்து அங்கேயே தங்கியுள்ளார்.
இலங்கை பெண் பலி
போரினால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு தப்பியோடியுள்ளனர். இந்த நிலையில் அவர்களால் கைவிடப்பட்ட நாய்கள் மற்றும் பூனைகளை பராமரிப்பதற்காகவே அவர் லெபனானில் தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.

லெபனானில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்த போதிலும், லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் வான்வழித் தாக்குதலில் இந்த பெண் உயிரிழந்துள்ளார்.
வான்வழித் தாக்குதல்
இந்த பகுதியில் சமீபகாலமாக இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

பெரும் சொத்துச் சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக அல் ஜசீரா தெரிவிக்கிறது.
எனினும், லெபனானில் இலங்கை பெண் உயிரிழந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் குறித்து இலங்கை அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.