புற்றுநோயாளிகளுக்கான மருந்து தட்டுப்பாடு - நோயாளிகள் பெரும் அவதி
நியூபோஜென் எஸ்.சி' (Neupogen S.C) உள்ளிட்ட பல புற்றுநோய் மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், குறித்த மருந்துகளை வெளியிலிருந்து வாங்குவதற்கான அதிக செலவு ஏற்படுகின்றது.
அதன் காரணமாக, புற்றுநோயாளிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டணியின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில காலமாக அரசாங்க மருத்துவமனைகளில் புற்றுநோய் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், மருத்துவமனைகளில் மருந்துப் பற்றாக்குறையைப் பயன்படுத்தி, பதிவு செய்யப்படாத புற்றுநோய் மருந்துகளை மிக அதிக விலைக்கு விற்க ஒரு கும்பல் நாட்டில் செயல்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பில் இருந்து கருணா குழுவால் வெளியேற்றப்பட்ட யாழ் வர்த்தகர்கள் - சிறையில் சுட்டு கொல்லப்பட்ட கருணாவின் சகா
பொருளாதார நெருக்கடி
சில புற்றுநோயாளிகள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை வெளியிலிருந்து வாங்குவதற்காக ஐந்து லட்சத்திற்கும் அதிகமான ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது.

தற்போதைய பொருளாதாரச் சூழலில், இந்தச் செலவு நோயாளிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் முற்றிலும் தாங்க முடியாதது என்று கூறும் மருத்துவர் சஞ்சீவ, வெளி மருந்தகங்களிலிருந்து வாங்கப்பட்ட பதிவு செய்யப்படாத மருந்துகளின் தரம் குறித்தும் கடுமையான கேள்விகள் எழுந்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.
தற்போது, சந்தையில் பல மருந்துகளின் விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த நிலைமை புற்றுநோய் மருந்துகளையும் நேரடியாகப் பாதித்துள்ளது.
எனவே, தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக நீண்டகால மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் அத்தகைய ஆதரவற்ற நோயாளிகளுக்காக ஒரு சிறப்பு நிவாரணத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் நிதி அமைச்சும் சுகாதார அமைச்சும் அவசர கவனம் செலுத்த வேண்டியது அவசியம் எனவும் மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.