துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்: பிரதான சந்தேகநபர் தலைமறைவு
தலாவ - மெதகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (28) காலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு காயமடைந்தவர் வரகொட தலாவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணை
காணிக்கு நீர் எடுக்கும் குழாய் தொடர்பில் பக்கத்து காணியின் உரிமையாளருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் பக்கத்து காணியின் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, சந்தேகநபரை கைது செய்ய தலாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam