பொலிஸ் தலைமையகத்தை இடமாற்றம் செய்ய தீர்மானம்
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்தை வேறொரு இடத்திற்கு இடமாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் கொழும்பு- கொம்பனித் தெருவில் அமைந்துள்ள விமானப்படைத் தலைமையக கட்டடத்தில் பொலிஸ் தலைமையகம் விரைவில் செயற்படவுள்ளது.
விமானப்படையின் தலைமையக கட்டிடம் 12 மாடிகளைக் கொண்டுள்ளதுடன், சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
போக்குவரத்துக் கட்டுப்பாடுகள்
குறித்த கட்டிடத்தை பொலிஸ் தலைமையகமாக மாற்றும் வகையில், விமானப்படையினர் அங்கிருந்து வெளியேறி, கட்டிடம் தற்போது பொலிஸ் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகம் புதிய இடத்துக்கு மாற்றப்பட்டவுடன், தற்போதைய பொலிஸ் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவிடப்படவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு