சாந்தன் மிக விரைவில் இலங்கை வருவார்: டக்ளஸ் தரப்பு ஆரூடம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் மிக விரைவில் இலங்கை வருவார் என ஈழ மக்கள் ஜனனாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ.சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று(03.02.2024) நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியினுடைய கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இந்திய உச்ச நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள சாந்தன் என்று அழைக்கப்படுகின்ற தில்லையம்பலம் சுதேந்திரராசா இலங்கை வருவது தொடர்பாக ஊடகங்களிலே பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.

உண்மையில் அவர் இலங்கைக்கு வருவதற்கு அவர்களுடைய பெற்றோர், கட்சியினுடைய தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவாந்தாவிடம் அணுகி தங்களுடைய மகனை இலங்கைக்கு அழைத்து வருவதில் உள்ள தடைகள், பாதுகாப்பு தரப்பினது அனுமதிகளை பெற்றுத்தருமாறு கோரியிருந்திருக்கிறார்கள்.
சாந்தனுடைய தாயார; 'தன்னுடைய முதுமை காரணமாக இந்தியாவிற்க்கு சென்று அவரது மகனை பார்க்க முடியாதுள்ளதாகவும் ஆகவே மனிதாபிமான அடிப்படையில் தனது மகனை இலங்கைக்கு அழைத்துவர தங்களாலான உதவிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
அந்த வகையில் தென்னிலங்கையில் அரசுடன் அமைச்சர் தொடர்பு கொண்டதன் ஊடாக அவருடைய வருகை விரைவு படுத்தப்பட்டிருக்கின்றது." என்றார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan