ஆதி தமிழ்குடிக்கு ஏற்பட்ட அவலம்! - செய்திகளின் தொகுப்பு
அரும்பாக்கத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் வசிப்பிடங்களிலேயே நிரந்தர குடியிருப்புகளை ஏற்படுத்தி தருமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அரும்பாக்கத்தில் உள்ள இராதாகிருஷ்ணன் நகரில் குடியிருப்புகளை இடித்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட ஆதித்தமிழ்குடியினரை இன்று (01) நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி அவர்கள் துயரில் பங்கெடுத்த சீமான், அவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும்வரை துணைநிற்பேன் என்ற உறுதியையும் அளித்துள்ளார்.
இதன்போது - ஆளும் திமுக அரசின் அதிகாரப்போக்கினால், ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் தொன்றுதொட்டு வாழ்ந்துவந்த வசிப்பிடத்திலிருந்து ஆதித்தமிழ்குடியினரை அப்புறப்படுத்துவதா? அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே இக்கொடுஞ்செயலில் ஈடுபடுவதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,