இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: டெல்லி நோக்கி வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தம்! சூடுபிடித்துள்ள போராட்டக்களம்

Delhi India Protest
By Shadhu Shanker Jul 21, 2026 08:20 AM GMT
Report

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று(21) விவசாயிகளின் 'மகாபஞ்சாயத்து' கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

இதற்காக பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் நோக்கிப் புறப்பட்டனர்.

டெல்லியில் பெரும் பரபரப்பு! நாடாளுமன்றம் முற்றுகை - பிரதமர் மோடி அவசரமாக வெளியேற்றம்

டெல்லியில் பெரும் பரபரப்பு! நாடாளுமன்றம் முற்றுகை - பிரதமர் மோடி அவசரமாக வெளியேற்றம்

பெரும் போராட்டம் 

தேஷ் பச்சாவ் மோட்சா அமைப்பின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்தப் பேரணியைத் தடுக்க, பஞ்சாப் - அரியானா எல்லையான ஷம்பு பகுதியில் பொலிஸார் பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தினர். இரும்பு தடுப்புகள், பேரிக்கேட்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு, டெல்லிக்குள் செல்ல விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், ஷம்பு எல்லையிலேயே அமர்ந்து போராட்டத்தைத் தொடங்கினர். கடந்த ஆண்டு இதே எல்லைப் பகுதியில் நடைபெற்ற நீண்டகால விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்றிருந்த நிலையில், மீண்டும் அதே இடம் போராட்டக் களமாக மாறியுள்ளது.

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: டெல்லி நோக்கி வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தம்! சூடுபிடித்துள்ள போராட்டக்களம் | Shambhu Farmers March Delhi Stoped Haryana Border

இதற்கிடையில், அரியானாவின் அம்பாலா, குருக்ஷேத்ரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் தொடர்ந்து டெல்லி நோக்கிப் பயணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், டெல்லியில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் நடைபெற்று வரும் போராட்டமும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

நேற்று நாடாளுமன்றம் நோக்கிச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களை பொலிஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகைகுண்டுகளைப் பயன்படுத்தி கலைத்தனர்.

இந்த மோதலில் 118 பொலிஸாரும், 70 போராட்டக்காரர்களும் காயமடைந்ததாகவும், பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தவிர்த்து முக்கிய சாட்சியாளராக மாறிய சந்தன விக்ரமரத்ன! வாக்குமூலத்தில் வெளியான தகவல்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தவிர்த்து முக்கிய சாட்சியாளராக மாறிய சந்தன விக்ரமரத்ன! வாக்குமூலத்தில் வெளியான தகவல்கள்

அனுமதி மறுப்பு 

இன்றும் பேரணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களால் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவது முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விவசாயிகள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்திய சந்தையில் அதிக வாய்ப்பு கிடைக்கும் என்றும், இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டால் சோயாபீன், சோளம், பருத்தி, ஆப்பிள், பாதாம் மற்றும் பால் பொருட்கள் போன்றவை இந்திய சந்தையில் அதிகளவில் நுழையும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: டெல்லி நோக்கி வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தம்! சூடுபிடித்துள்ள போராட்டக்களம் | Shambhu Farmers March Delhi Stoped Haryana Border

அதன் விளைவாக, இந்தியச் சிறு விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும், கிராமப்புற பொருளாதாரம் சீர்குலையும் அபாயம் இருப்பதாகவும் விவசாய அமைப்புகள் எச்சரிக்கின்றன.

மேலும், இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் முழு விவரங்களையும் மத்திய அரசு பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்றும், விவசாயிகள், தொழிலாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தாமல் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடக் கூடாது என்பதே தங்களது முக்கிய கோரிக்கை என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பில் வெளியான தகவல்

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US