நாட்டை முடக்குவது தொடர்பில் அரசாங்கத்திற்குள் கடும் முரண்பாடு
இலங்கையில் கொவிட் வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், நாளாந்தம் மரணங்களின் எண்ணிக்கையும் தீவிரமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நாட்டை முழுமையாக முடக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ள நிலையில், முரண்பாடான நிலைப்பாடு உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான கட்டுப்பாடுகளை அரசாங்கம் அறிவிக்கவுள்ளது. முழுமையான முடக்கல் நிலை நாளாந்தம் உழைத்து வாழ்பவர்களிற்கும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளன.
நாட்டை மீண்டும் முடக்குவது பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற கரிசனையும் அரசாங்க வட்டாரங்கள் மத்தியில் காணப்படுகின்றது.
இன்று காலை ஜனாதிபதிக்கும் கொவிட் செயலணிக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் கடுமையான நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என அறிவிக்கப்பட்டது.
எனினும் இன்று காலை 10.30 மணிக்கு இடம்பெறவிருந்த இந்த சந்திப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிந்திய தகவலின்படி எந்தவொரு சந்தர்ப்பத்தில் நாட்டை முடக்கும் தீர்மானத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இல்லையென தெரிவிக்கப்படுகிறது.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
