பிளவுபட்ட தமிழ் கட்சிகளை கொழும்புக்கு அழைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர்
இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெயசங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களையும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனையும் ஒன்றாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான நான்கு நாள் பயணத்தை நேற்று முன்தினம் (17.01.2023) ஆரம்பித்த இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர், இன்று (19.01.2023) கொழும்புக்கு வந்தடைந்தார்.
விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு
கொழும்பில் அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன, வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
நாளை (20.01.2023) காலை 11.45 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவார்.
இந்த சந்திப்புக்கு விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களான இரா.சம்பந்தன் த.சித்தார்த்தன் ஆகியோருடன் தானும் பங்கெடுப்பார் என்று பேச்சாளர் எம். ஏ.சுமந்திரன் பத்திரிக்கை ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் தேர்தலுக்காக தாங்கள் பிரிவதாக கூறி வடக்கு கிழக்கிலுள்ள குறிப்பாக, தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் பிளவுபட்டுள்ள சூழ்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து புளொட் வெளியேறியிருப்பதாக அறிவித்து புதிய கூட்டணி உருவாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில், புதிய கூட்டணியிலிருந்து வெளியேறிய விக்னேஸ்வரனும் ஒரு கூட்டணியை அமைத்து கிட்டத்தட்ட தமிழர் தரப்பு 3 தரப்புகளாக தமிழ் தேசியம் சார்ந்திருக்க கூடிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் இந்த காலகட்டத்தில் இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
முக்கியமான சந்திப்பு
இந்நிலையில், தமிழ் தேசிய பரப்பில் இருக்கக்கூடிய தமிழ் தேசியம் சார்ந்திருக்க கூடிய கட்சிகளை ஓரணியாக அழைத்திருப்பது என்பது முக்கியமான செய்தியை கூறுவதற்கு மறைமுகமாக அரசியல் ரீதியாக முற்படுவதாக தெரிவதுடன் இன்னும் ஒரு தரப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது.
ஒட்டுமொத்தத்தில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் கட்சிகளுடைய ஒற்றுமையை இந்தியா விரும்புகின்றதா அல்லது என்ன விடயத்தை கலந்துரையாடப் போகின்றார்கள்.
இலங்கை அரசு எப்படியான வகையில் கலந்துகொள்ள வேண்டும். தமிழ் தேசிய கூட்டமையில் இருந்து இரண்டு கட்சிகள் வெளியேறிய சூழ்நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் யார் யார் கலந்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருக்கின்ற போது, ஜெய்சங்கருடனான சந்திப்பானது மிக முக்கியமான சந்திப்பாக அரசியல் பரப்பில் பார்க்கப்படுகின்றது.