இந்திய மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்..!
இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) சுகாதார, இரசாயன உரங்கள் அமைச்சர் மற்றும் பா.ஜ.கவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது இந்தியாவின் விஜயவாடா நகரில் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இந்த சந்திப்பின் போது இந்திய தேர்தல்களின் சமீபத்திய வெற்றி மற்றும் மும்முறை தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்தமைக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கைக்கு தொடர்ந்து அளித்து வரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, இலங்கைக்கு விஜயம் செய்ய அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி தொடர்பான இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இந்நிலையில், இலங்கையில் பெருந்தோட்ட சமூகத்தின் 200ஆவது ஆண்டு நினைவு முத்திரையையும் ஆளுநர் வழங்கி வைத்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் திருவிழா




