தந்தை செல்வா நற்பணி மன்ற வெள்ளி விழா! லங்காசிறி ஊடகவியலாளர் கௌரவிப்பு (Video)
தந்தை செல்வா நற்பணி மன்ற வெள்ளி விழாவை முன்னிட்டு கடந்த 30ஆம் திகதி கௌரவிப்பும், மலர் வெளியீடும் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு கொழும்பு விவேகானந்தர் சபை பிரதான மண்டபத்தில் நடத்தப்பட்டிருந்தது.
இந்த கௌரவிப்பு விழாவில் லங்காசிறியின் ஊடகவியலாளர் டில்சான் வின்ஷன் கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பலரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் கலந்து கொண்டிருந்ததுடன் சிறப்பு விருந்தினராக ஆளுனர் லயன் ஆர்.எல் ராஜ்குமார் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்குதல், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் கூடிய புள்ளிகள் எடுத்த மாணவர்களுக்கு பதக்கம் அணிவிக்கும் நிகழ்வும், கண் பரிசோதனை செய்தவர்களுக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வும் நடைபெற்று மன்றத்தில் சேவை செய்த உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வும் அமரர் பிரதி பொலிஸ்மா அதிபர் அரசரட்ணம் அரங்கில் நடைபெற்றுள்ளது.
கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் ஏனைய மாகாணங்களை சேர்ந்த சுமார் 21 பேர் தந்தை செல்வா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த நிகழ்விற்கு லங்காசிறி ஊடக வலையமைப்பு இணை அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 10 மணி நேரம் முன்
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan