நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய முப்படையினர் அழைப்பு: ஜனாதிபதி விசேட உத்தரவு
நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய முப்படையினரையும் அழைப்பதற்கான விசேட உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.
குறித்த கட்டளை நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (03.03.2026) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை பேணும் நோக்கில் இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே இந்த விசேட ஆணை பிறப்பிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் அமைதி மற்றும் சட்ட ஒழுங்கைப் பராமரிப்பதில் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் நாடளாவிய ரீதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri