நாட்டில் அவதானத்துடன் இருக்கும் புலனாய்வுப் பிரிவினர், பாதுகாப்பு தரப்பினர்
நாட்டில் அடிப்படைவாதம் தலைதூக்குவதற்கு ஒருநாளும் இடமளிக்கப்படாது என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
புலனாய்வுப் பிரிவினரும் நாட்டின் ஏனைய பாதுகாப்பு தரப்பினரும் மிகவும் அவதானத்துடன் இருக்கின்றனர். எனவே அடிப்படைவாதிகள் தலைதூக்குவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்படாது.
அடிப்படைவாதத்தை போதிக்கும் புத்தகங்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவை அடையாளம் காணப்பட்டு சுங்கத் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாடசாலை புத்தகங்களிலும் பிழையான விடயங்கள் சில கற்பிக்கப்படுகின்றன. அவையும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சிலை வழிபாடுகளில் ஈடுபடுவோரை கொலை செய்தல், வேற்று மதங்களை வழிபாடு செய்வோரை துன்புறுத்தல் போன்ற விடயங்கள் பாடசாலை புத்தகங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
எனவே பிழையான விடயங்கள் உள்ளடக்கப்பட்ட புத்தகங்கள் அடையாளம் காணப்பட்டு அவ்வாறான விடயங்கள் நீக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam