சூட்சுமமான முறையில் இயங்கிய சட்டவிரோத மதுபான நிலையம் முற்றுகை
கிளிநொச்சி (Kilinochchi) இரத்தினபுரம் பகுதியில் வீட்டின் குளியல் அறை பகுதியில் சூட்சுமமான முறையில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத மதுபான நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது கசிப்பு உற்பத்தியை மேற்கொண்ட 20 வயது இளைஞன் ஒருவரும் நேற்று இரவு (24.03.2025) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
நிலத்தில் தோண்டி யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு கோடா பரல் தாக்கப்பட்டு தண்ணீர் குடத்தில் குழாய்கள் பொருத்தப்பட்டு கேஸ் (gas) அடுப்பு மூலம் தீ மூட்டப்பட்டு இவ் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 380 லீட்டர் கோடாவும் 20 லீட்டர் கசிப்பும் கசிப்பு உற்பத்திக்கான பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri

தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
