பொதுமன்னிப்பு கோரிக்கைக்கு மத்தியில், ரஞ்சன் மீதான இரண்டாவது "நீதிமன்ற அவமதிப்பு" விசாரணை!
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை உயர்நீதிமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
ராமநாயக்கவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அஷான் பெர்னாண்டோ, அவரது சிரேஷ்ட சட்டத்தரணி அனுர மெத்தேகொட உடல்நலக்குறைவு காரணமாக நீதிமன்றில் முன்னிலையாக முடியாதுள்ளதாக நீதிமன்றில் அறிவித்தார்.
இதனையடுத்தே விசாரணை, மார்ச் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதன்போது கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்போது ஸூம் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பைப் படித்து வருவதாகவும் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நீதிமன்றத்தை அவமதித்த முதல் குற்றத்துக்காக 2021, ஜனவரி 11அன்று ரஞ்சன் ராமநாயக்கவை குற்றவாளி என தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், அவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.
இந்தநிலையில் ரஞ்சன் ராமநாயக்கவை ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுவிக்கவேண்டும் என்று எதிர்கட்சி தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 12 மணி நேரம் முன்

நடிகர் அஜித்தின் இந்த இளம் வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. பலரும் பார்த்திராத ஒன்று Cineulagam

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri

விஜய், அஜித், விக்ரம் என முவரும் நிராகரித்த திரைப்படம் ! சூர்யா நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன கதை.. Cineulagam
