மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த கதி
குருணாகல் கடிகமுவ-கொஸ்வத்த வீதியில் சம்பவித்த கோர விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி மாலை 7.00 மணியளவில் ஏற்பட்ட விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற 17 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.
தரன பகுதியைச் சேர்ந்த ஜே.எச். கலிந்து மிஹிரங்க என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாணவனுக்கு நேர்ந்த கதி
குளியாப்பிட்டிய, பகுதியில் உள்ள பாடசாலையில் 12 ஆம் வகுப்பில் கற்கும் குறித்த மாணவன் கல்லூரியின் கைப்பந்து அணியில் திறமையான வீரராக இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் நடந்த தினத்தன்று மாலை, கடிகமுவவில் இருந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, இரண்டு நபர்களால் மோட்டார் சைக்கிளின் நடுவில் வைக்கப்பட்டிருந்த இரும்பு ஏணியில் மோதியதில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கவிழ்ந்தன.
தலையில் பலத்த காயமடைந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றைய இருவரும் காயமடைந்து குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பிங்கிரிய பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸ் நிலையத்தில் மயிலை அடிக்கச்சென்ற கோமதி, ஆதாரத்தை காட்டிய மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு எபிசோட் Cineulagam
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri