நாளை முதல் முழுமையாக திறக்கப்படும் பாடசாலைகள் - பெற்றோர்களுக்கு விசேட அறிவிப்பு
இலங்கையில் கொவிட் தொற்றால் இடைநிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்படாத தரம் 6 முதல் 9 வரையான மாணவர்களின் கல்வி நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்துடன் இதற்கு முன்னர் முதலாம் வகுப்பில் இருந்து 5ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கும் 10ஆம் வகுப்பில் இருந்து உயர்தரம் வரையான வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதற்கமைய நாளையதினம் முதல் பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளும் திறக்கப்படவுள்ளன.
காய்ச்சல், சளி போன்ற நோய் அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதனை தவிர்க்குமாறு சுகாதார சேவை பணிப்பாளர் அசேல குணவர்தன பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்தள்ளார்.
இதேவேளை, ஆசிரியர், அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு ஜனவரி மாதத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றாலும் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
