பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வான் விபத்து - 13 பேர் வைத்தியசாலையில்
நாவலப்பிட்டி - கெடபுலாவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வான் ஒன்று வீதியை விட்டு விலகிச்சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (05) காலை 7.00 மணியளவில் வீதியை விட்டு விலகி வான் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பொலிஸார் விசாரணை
நாவலப்பிட்டி - கெட்டபுலாவிலிருந்து நாவலப்பிட்டி ஹரங்கல நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வான் நாவலப்பிட்டி திஸ்பனே சந்தி பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 13 பேர் நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில், 11மாணவிகளும் இரண்டு மாணவர்களும் 7 முதல் 10 வயதுக்குட்பட்டவர்கள் என நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வானின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், நாவலப்பிட்டி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri