பாடசாலை மாணவிகளுடன் அதிசொகுசு காருக்குள் சிக்கிய ஆசிரியர் - விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்
கம்பஹாவில் பாடசாலை மாணியுடன் முறையற்ற வகையில் செயற்பட்ட ஆசிரியர் அதிசொகுசு கார் ஒன்றுக்குள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
லக்கல, பக்கமுன மற்றும் நாவுல ஆகிய பகுதிகளில் பிரபலமான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு குறித்த ஆசிரியரை, மாணவி ஒருவரின் தந்தை தாக்கியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை விசாரிக்கும் போதே இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
மாணவி வாக்குமூலம்
மாணவி வழங்கிய வாக்குமூலத்தில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, சந்தேகநபர் மற்றும் மாணவியின் கையடக்கத் தொலைபேசிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.

இதன்போது, மாணவியின் முறையற்ற புகைப்படங்கள் ஆசிரியருடன் பரிமாறப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பான தகவல் வெளிவந்துள்ளது. பொலிஸ் விசாரணைகளின் போது, சந்தேக நபரான ஆசிரியர், தனது தனியார் வகுப்பிற்கு வரும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு இடையே காதல் உறவுகளை ஏற்படுத்திக் கொடுத்தமை தெரியவந்துள்ளது.
மருத்துவப் பரிசோதனை
இவர் மாணவிகளை தனது சொகுசு காரில் நக்கிள்ஸ் பகுதி மற்றும் மலை உச்சிகளில் அமைந்துள்ள காட்சி மையங்களுக்கு அழைத்துச் சென்று, அந்த வாகனத்திற்குள்ளேயே அவர்களுடன் முறையற்ற உறவில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மாணவி, மருத்துவப் பரிசோதனைக்காகத் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான ஆசிரியர் வேறு மாணவிகளுடன் சீண்டலில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.