பாடசாலை மாணவி ஒருவர் சடலமாக மீட்பு: சந்தேகம் வெளியிட்டுள்ள உறவினர்கள்
நிவித்திகல - வட்டபொட பகுதியிலுள்ள இறப்பர் தோட்டத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவியின் சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து சில அடி தூரத்தில் மாணவியின் பாடசாலை புத்தகப் பை மற்றும் இரத்தக்கறை என்பன காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகாமையில் இறப்பர் மரம் வெட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும், பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் கவனக்குறைவால் மரத்தின் ஒரு பகுதி மாணவியின் தலையில் விழுந்திருக்கலாம் எனவும் மாணவியின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
எனினும், தமது மகளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு உதவி கேட்ட போது அங்கிருந்தவர்கள் உதவவில்லை என மாணவியின் தாய் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில், சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இரத்தினபுரி பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam
