கொழும்பு துறைமுக நகரத்தில் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்பாடுகள்
கொழும்பு துறைமுக நகரத்தில் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திக்காக, காணிகளை குத்தகைக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்ட செயற்பாட்டிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அபிவிருத்தி
இதற்கமைய கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக காணிகளை குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் 6(1) (c) பிரிவின் விதிகளின்படி மருத்துவமனை, பாடசாலை மற்றும் பல்கலைக்கழகத்திற்கான காணிகளை குத்தகைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 11 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri