உயர்தர அனுமதிக்காக வந்த பாடசாலை மாணவி விபத்தில் பலி
கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ9 வீதியின் மேற்கு பகுதியிலிருந்து பாடசாலை நோக்கி மஞ்சள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, மற்றுமொரு மாணவி காயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று(15) காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மாணவிகள் ஏ9 வீதியின் மேற்கு பக்கத்திலிருந்து பாடசாலை பக்கமாக மஞ்சள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது ஏ9 வீதியில் பயணித்த பட்டா ரக வாகனம் மாணவிகள் கடந்து செல்வதற்காக நிறுத்தியது.
இதன் பின் வந்த மின்சார சபை ஒப்பந்தகாரருடைய ஹன்ரர் ரக வாகனமும் நிறுத்தியிருந்த போது பின்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஹன்ரர் ரக வாகனத்தை மோதியதி்ல் ஹன்ரர் வாகனம் பட்டாவுடன் மோதி குறித்த வாகனங்கள் இரண்டும் மாணவிகளுடன் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் போது சம்பவ இடத்திலயே திருவாசகம் மதுசாளினி 17 அகவையுடைய மாணவி பலியானதுடன், மற்றொரு மாணவி காயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
