யாழ்.சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் கல்லறை நாயகர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி
யாழ்ப்பாணம் - வேலணைத் தீவகத்தில் அமைந்துள்ள சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஈழப் போரில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு பொது மக்களும் அவர்களின் உறவினர்களும் மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சுடர் ஏற்றி அஞ்சலி
நினைவேந்தலின் ஆரம்பத்தில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாட்டி மாதா தேவாலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து பொது ஈகைச்சுடர் மூன்று மாவீரர்களின் தந்தையான செல்லர் அருளம்பலத்தினால் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னாள் போராளிகள், மத குருமார்கள், அரசில்வாதிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
[
மேலதிக தகவல் - தீபன்
