கோப் உறுப்பினர் பட்டியலில் புறக்கணிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சரித ஹேரத்
சபாநாயகரால் இன்று திங்கட்கிழமை (3) அறிவிக்கப்பட்ட கோப் உறுப்பினர் பட்டியலில் கோப் அமைப்பின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரித ஹேரத், ஆளும் தரப்பில் இருந்து, சுயேட்சையாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியுடன் இணைந்து செயல்படுகின்றார்.
கோப் உறுப்பினர் பட்டியல் வெளியானது
இந்த நிலையில் இரண்டு மாத கால தாமதத்திற்குப் பிறகு கோப் உறுப்பினர் பட்டியல் வெளியாகியுள்ளது என்றும், தாம் கணித்தபடி, தமது பெயர் பட்டியலில் இல்லை என்றும், அவர் டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
திருடர்கள், ஊழல் நிறைந்த அமைப்புக்கு ஆதரவானவர்கள் மற்றும் பொருளாதாரக் குற்றங்களுக்குப் பின்னால் உள்ளவர்கள், தம்மை வெளியேற்ற விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
நடந்ததற்கு ஜனாதிபதியும், பிரதமரும் வெட்கப்பட வேண்டும் என பேராசிரியர் சரித
ஹேரத், தமது பதிவில் தெரிவித்துள்ளார்.