கிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்! வெளிப்படுத்தும் சரத் வீரசேகர
கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பணத்தின் மீதுதான் அக்கறை உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்
மேலும் தெரிவிக்கையில், கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தாய் நாடு என்ற அக்கறை உள்ளதா அல்லது அவர்களுக்கு வெறும் பணத்தில் மீதுதான் அக்கறை உள்ளதா எனும் சந்தேகம் இன்று மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், அமைச்சர் ரொஷான் ரணசிங்க உலகக் கிண்ணத் தொடர் இருப்பதால், எல்.பி.எல். போட்டிகளில் விளையாட வேண்டாம் என கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அறிவித்திருந்தார்.
பணத்திற்காக விளையாடிய வீரர்கள்
ஆனால், பணத்திற்காக சில வீரர்கள் எல்.பி.எல். போட்டியில் விளையாடினார்கள். இவ்வாறு விளையாடிய சிறந்த வீரர்களில் ஐவர் காயமடைந்தனர்.
இதனால், உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாட முடியாத நிலைமை இவர்களுக்கு ஏற்பட்டது. தனது நாட்டுக்காக அன்றி பணத்திற்காக இவர்கள் எல்.பி.எல்.இல் விளையாடினார்கள்.
இதனால்தான், இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



