அழையா விருந்தாளியாக சென்ற சரத் பொன்சேகா : மறுக்கப்பட்ட வாய்ப்பு - செய்திகளின் தொகுப்பு
தன்னை கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு எதிராக தடை உத்தரவை பெற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, கம்பஹா மஹரவில் கட்சியின் தலைமையகத்தால் நடத்தப்பட்ட பேரணியில் எவரும் எதிர்பார்க்காத வகையில் கலந்து கொண்டார்.
எனினும், இந்த பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படாமலேயே அவர் கலந்து கொண்டதாக கட்சியின் உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேரணியில், பொன்சேகாவுக்கு முன்வரிசை ஆசனம் வழங்கப்பட்ட போதிலும், கட்சியின் எம்.பி.க்கள் பொன்சேகாவுடன் கலந்துரையாடவில்லை என அறிய முடிகிறது.
மேலும், பொன்சேகா தம்மை உரை நிகழ்த்துவதற்கு அனுமதிக்குமாறு கோரிய போதும் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |