16 வருட சிறை! பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு சென்ற சரண குணவர்தன
புதிய இணைப்பு
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் வழக்கு ஒன்றுக்கு நான்கு ஆண்டுகள் வீதம் மொத்தம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பில் உணவகமொன்றில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து! மூவர் உயிரிழப்பு - மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதி
பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி விடுத்த கோரிக்கை
பிரதிவாதிக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சுமத்தப்பட்டிருந்த ஊழல் குற்றச்சாட்டுகளை, நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் முறைப்பாட்டாளர்கள் நிரூபித்துள்ள நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை அறிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பொருளாதாரம் வங்குரோத்தடைவதற்கும் இத்தகைய செயல்கள் வழிவகுத்துள்ளன என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 303 ஆவது பிரிவின் கீழ் மென்போக்கைக் கையாளுமாறு பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும், இக்குற்றத்தின் தன்மையைக் கருத்திற் கொள்ளும் போது, அரசு நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்களைத் ஊக்கமிழக்கச் செய்வதற்கு ஏதுவான வகையிலான தண்டனையொன்றை வழங்க நீதிமன்றம் விதிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

மூன்றாம் இணைப்பு
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, வழக்கு ஒன்றுக்கு நான்கு ஆண்டுகள் வீதம் மொத்தம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சரண குணவர்தனவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள 4 வழக்குகளில் ஒவ்வொரு வழக்குக்கும் தலா 4 ஆண்டுகள் வீதம் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய வழக்குகளுக்காக சரண குணவர்தனவுக்கு 18 இலட்சம் ரூபா அபராதமும் நீதிமன்றம் விதித்துள்ளது.

இரண்டாம் இணைப்பு
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என்று கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, தண்டனை விபரங்களை அறிவிப்பது தொடர்பான விடயங்களை சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்வைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு வழக்குகளின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.

சரண குணவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளின் தீர்ப்பு இன்றைய தினம் (09) அறிவிக்கப்படவுள்ளது.
சரண குணவர்தன தேசிய லாட்டரி சபையின் தலைவராகப் பணியாற்றிய போது, 2006ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளின் தீர்ப்புகள் மே 26ஆம் திகதி அறிவிக்கப்படவிருந்த நிலையில், தீர்ப்புகள் தயாராகவில்லை என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹால் நீதிமன்றத்திற்கு அறிவித்ததுடன், நான்கு வழக்குகளின் தீர்ப்புகளும் ஜூன் 9ஆம் திகதியான இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டன.
you may like this