யாழ். சந்நிதியான் ஆச்சிரமத்தால் கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கு உதவி
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிமரத்தால் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தன் ஆலயம் வரை பாதயாத்திரை செல்கின்ற யாத்திரிகர்களுக்கு மருத்துவப் பொருள்கள், மற்றும் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வானது, நேற்று (27.04.2024) திருகோணமலை குச்சவெளி கிராமத்தில் அமைந்துள்ள தான்தோன்றி சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.
நிதி உதவி
குறித்த பொருட்களை, ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ், தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று 04ஆம் கட்டமாக வழங்கி வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, திருகோணமலை கப்பல்துறை சரஸ்வதி வித்தியாலயத்திற்கு பாதுகாப்பு வேலி அமைப்பதற்க்காக 200,000 ரூபா நிதி உதவி 2ஆம் கட்டமாக பாடசாலை முதல்வரிடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |