வவுனியாவில் சங்கு கூட்டணி அவசர கலந்துரையாடல்
வவுனியாவில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியினர் (சங்கு) முக்கிய கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளனர்..
இந்த கலந்துரையாடல் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று ( 18) இடம்பெற்றுள்ளது.
கூட்டணியின் அரசியல் நகர்வுகள்
இந்த கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சுரேஸ் பிரேமசந்திரன், மு.சந்திரகுமார், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் செயலாளர் நா.ரட்ணலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி, முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
2026ஆம் ஆண்டில் கூட்டணியின் அரசியல் நகர்வுகள் தொடர்பாகவும், மாகாணசபை தேர்தல், புதிய அரசியலமைப்பு, உள்ளுராட்சி மன்றங்களின் நிலைப்பாடு உட்பட பல்வேறு விடயங்கள் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam