சங்கீத்சன் கைது! சாதகமான முடிவு தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு
கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி பாடகர் சங்கீத்சன் தொடர்பில் பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபருடன் இன்றையதினம் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். இதன் பின்னர் சாதகமான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, பாடகர் சங்கீத்சன் தொடர்பில் அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இருப்பினும் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான உரிமை காணப்படுகிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் பாடல் பாடி, அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தமைக்காகவே கிளிநொச்சி இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞன் கைது தொடர்பில் பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபருடன் இன்றைய தினம் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். இதன் பின்னர் சாதகமான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan