வெளிநாடொன்றில் மோசமடையும் காலநிலை : ஆயிரக்கணக்கானோர் வைத்தியசாலையில் அனுமதி
ஈராக்கின் பல நகரங்களில் கடந்த இரண்டு நாட்களாக வீசிய மணல் புயல் காரணமாக வானம் ஒரு விசித்திரமான செம்மஞ்சள் நிறமாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காலநிலை மாற்றத்தால் வறட்சி மற்றும் பாலைவனமாக்கல் அதிகரித்து வருவதால், இதுபோன்ற புயல்கள் மோசமடைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மூச்சு திணறல்
அத்தோடு, இந்தப் புயலின் தாக்கத்தினால் சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், புயல் காரணமாக பாஸ்ரா மற்றும் நஜாப் ஆகிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2025 ஆம் ஆண்டில் ஈராக்கில் இதுவரை ஏற்பட்ட புயல்களிலேயே மிக மோசமானது இந்தப் புயல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

மணிவிழாவிற்கு மாலையுடன் உட்கார்ந்த குணசேகரனுக்கு விழுந்த பெரிய இடி.. கெத்து காட்டிய ஜனனி, எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
