நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் இடைநிறுத்தம்:அரசை சாடும் சாணக்கியன்
நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் இடைநிறுத்தப்பட்ட செயற்பாடு நாட்டுக்கு ஆபத்தானது என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தனது X கணக்கு பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனநாயகத்தின் நான்கு தூண்களின் ஒன்றான நாடாளுமன்றத்தில் இவ்வாறு நடப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.
அதன்படி, நாடாளுமன்றத்தின் உரிய செயல்முறை சீர்குலைந்தால், நாட்டிற்கு அனுப்பப்படும் செய்தி மிகவும் ஆபத்தானதாகும் என தெரிவித்துள்ளார்.
இடைநிறுத்தம் செய்யப்பட்ட நாயகம்
நாடாளுமன்றத்தின் பணியாளர் தொகுதி பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கடந்த ஜனவரி 23ஆம் திகதி முதல் இந்த இடைக்காலத் தடை நடைமுறைக்கு வந்துள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது நியமனம் தொடர்பாக எழுந்துள்ள சில சிக்கல்கள் மற்றும் சர்ச்சைகளைத் தொடர்ந்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Following yesterday’s suspension of Parliament’s second most senior official, the concerns are now grave.
— Shanakiyan Rajaputhiran Rasamanickam (@ShanakiyanR) January 25, 2026
Media reports allege this was retaliation linked to the Speaker, carried out without a charge sheet, an inquiry, or even a right to be heard. This is not just interference… pic.twitter.com/jfq1f3xsrK
சமிந்த குலரத்ன கடந்த 2023 செப்டம்பர் 15ஆம் திகதி முதல் நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் மற்றும் பணியாளர் தொகுதி பிரதானி ஆகிய பதவிகளைப் பொறுப்பேற்றுச் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தகதாகும்.
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
விருந்தில் ஏற்பட்ட சண்டை.. வெளிவந்த உண்மையால் கோபத்தில் பாண்டியன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam