இலங்கையை வந்தடைந்தார் சமந்தா பவர்
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் சமந்தா பவர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (10) இலங்கை வந்துள்ளார்.
இலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் அமெரிக்க பிரதிநிதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்துவார் என சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்து நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடவும் சமந்தா பவார் திட்டமிட்டுள்ளார்.
மேலும், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரை எவ்வாறு சந்தித்து அவர்களின் வாழ்வை மீட்டெடுக்க ஆதரவு வழங்குவது என்பது குறித்து சமந்தா பவர் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
