கொழும்பில் வீதி உணவகங்களில் திடீர் சோதனை
கொழும்பு - மஹரகம பொது சுகாதார பரிசோதகர்களினால் கொட்டாவ மற்றும் தலவத்துகுடா பகுதிகளிலுள்ள வீதி உணவகங்களில் அவசர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட உணவுச் சோதனையின் போது, சுகாதாரமற்ற மற்றும் தரமற்ற உணவுகளை விற்பனை செய்த 14 உணவகங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆறு உணவகங்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதாகவும், சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தலவத்துகொட, கிம்புலாவலயில் உள்ள 35 வீதியோர உணவு விற்பனையாளர்கள் உட்பட 55 உணவகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
பகிரங்க விற்பனை
அங்கு மாவு உணவுகள், இறைச்சி மீன் உணவுகள் மற்றும் பிற உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டு பகிரங்கமாக விற்கப்படுகின்றன.

இதனால் வாகனங்களிலிருந்து வரும் தூசி மற்றும் புகை நேரடியாக வெளிப்படுவதால் உணவுகள் மாசுபடுகின்றன.
இது தவிர, சமைத்த உணவைபச்சை உணவுடன் சேர்த்து வைப்பது, துருப்பிடிக்காத இரும்புத் தட்டுகளில் இறைச்சியை வறுத்தல் ஆகியவையும் இங்கு செய்யப்பட்டன.
மேலும் கொத்து, பிரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்ற மூல உணவுகள் சுற்றுச்சூழலுக்கு வெளிப்படையாக காட்சிப்படுத்தப்பட்டு அதிக தூசி பெருகும் அபாயத்தில் காணப்பட்டன.” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நிச்சயதார்த்தம் நின்றுபோனது.. அதிர்ச்சியில் குடும்பம்.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan