தனியார் துறை ஊழியர்களுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்!
தனியார் துறை ஊழியர்களின் மாதாந்திர குறைந்தபட்ச ஊதியத்தை 27,000 ரூபாயாக உயர்த்துவதற்கான சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொழிலாளர் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, தனியார் துறை ஊழியர்களுக்கான மாதாந்த குறைந்தபட்ச சம்பளம் 21,000 ரூபாவாக உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சம்பள உயர்வு
அத்தோடு, சம்பள உயர்வு இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு ஏற்ப உள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
குறித்த திருத்தத்தை தொடர்ந்து, தனியார் துறை ஊழியர்களுக்கான மாதாந்த குறைந்தபட்ச சம்பளம் அடுத்த ஆண்டு 35,000 ரூபாவாக உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
