தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு : ஜனாதிபதியின் அறிவிப்பு
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். இதனால் தனியார் துறையிலும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுகிறது. பெருந்தோட்டத் துறையினருக்கும் சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சம்பள அதிகரிப்பின் பலனை பொருளாதாரம் பெறுகிறது எனவும் அவர் கூறினார்.
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும், பிரதேச செயலாளர்களுடனும் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரத்தில் சேர்க்கப்படும் பணம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது நிவாரணம் தேவைப்படும் மக்களுக்கு அவற்றை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன்படி, நாங்கள் வழங்கும் பணத்தின் அளவை அதிகரித்துள்ளோம். பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இந்த திட்டத்தில் சில குறைபாடுகள் இருக்கலாம். அந்தக் குறைகளை இந்த வருடம் சரி செய்து கொண்டு நாம் முன்னேற வேண்டும்.
குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு நாங்கள் வழங்கும் பணம் அனைத்தும், நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் சேர்க்கப்படுகிறது. ஏனெனில் அவர்கள் அந்த பணத்தை அன்றாட தேவைகளுக்காக செலவிடுகிறார்கள்.
அதன்படி இந்த ஆண்டு இந்த பணம் நாட்டின் பொருளாதாரத்தில் சேர்க்கப்படும். மேலும், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். இதனால் தனியார் துறையிலும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுகிறது.
பெருந்தோட்டத் துறையினருக்கும் சம்பள அதிகரிப்ப வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள அதிகரிப்பின் பலனை பொருளாதாரம் பெறுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri