கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக சஜித் பிரேமதாச அறிவிப்பு
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக தாம் போட்டியிடவுள்ளதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணிக்கு, தாம் தலைமை தாங்க வேண்டும் என்று தனது கட்சி முடிவு செய்துள்ளதாக பிரேமதாச கூறியுள்ளார் எனினும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு தனது கட்சி உறுப்பினர்கள் சிலர் மீது பழி சுமத்தமுடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோல்வியடைந்ததற்கு முழுப்பொறுப்பு
எனவே, தேர்தலில் தோல்வியடைந்ததற்கு முழுப்பொறுப்பையும் தாம் ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் முதல் விருப்பு வாக்குகளாக 5,634,915 வாக்குகளையும் இரண்டாவது அல்லது மூன்றாவது விருப்பமாக 105,264 வாக்குகளையும் பெற்று மொத்தமாக 5,740,179 வாக்குகளைப் பெற்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முதல் விருப்பமாக 4,363,035 வாக்குகளையும் இரண்டாவது அல்லது மூன்றாவது விருப்பமாக 167,867 வாக்குகளையும் பெற்று மொத்தம் 4,530,902 வாக்குகளைப் பெற்றார்.
இதன் அடிப்படையில் அதிக மொத்த வாக்குகளால் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |