சஜித் தரப்பு மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, தங்களுடைய பொருளாதார கொள்கைகளை பிரதி செய்வதாக தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி இந்தக் குற்றச்சாட்டை இன்று முன்வைத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவையுடன் விவாதத்தில் ஈடுபடுவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கைகளை தம்மால் நடைமுறைப்படுத்த முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி, பொதுமக்களை நம்ப வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியினால் வெளியிடப்படும் பொருளாதார கொள்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி பிரதியிட்டு அதனை கூறி வருவதாக சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
ஹர்ச டி சில்வா, சுனில் ஹந்துனெத்தி மற்றும் எரான் விக்ரமரட்ன ஆகியோர் பல தொலைக்காட்சி விவாததங்களில் பங்கேற்று வெளியிட்ட கருத்துக்களை தற்பொழுது மாற்றிக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு குறித்து மார்ச் மாதம் தமது கட்சி வெளியிட்ட நிலைப்பாட்டை மே மாதம் 15ம் திகதி ஹர்ச டி சில்வா வெளியிடுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |