கடும் அரசியல் மயப்பட்டுள்ள பொலிஸாரின் செயற்பாடுகள் : சஜித் குற்றச்சாட்டு
இலங்கையில் பொலிஸாரின் செயற்பாடுகள் கடும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மைய நாட்களில் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அவர் இவ்வாறு அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
சில சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் அரசியல் கண்காட்சிகளாக அல்லது ஊடக கண்காட்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவது தெட்டத் தெளிவாக விளங்குகின்றது என தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் கருத்துக்கள்
பொலிஸ் மா அதிபர் அரசாங்க பிரசார இயந்திரத்தின் ஓர் பங்குதாரராக செயல்படுவது தெரிகின்றது என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதாண தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் மூலம் இந்த விடயம் அம்பலமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரதிநிதி என்ற வகையில் ஜகத் விதான முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் குறிப்பாக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் பொலிஸ் மா அதிபரின் கருத்துக்கள் மூலம் கடும் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
எனது நிறம் வைத்து இப்படியெல்லாம் விமர்சனம் வந்தது, ஆனால்... சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக் Cineulagam
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri