நாட்டிற்கு வருமானத்தை ஈட்ட சஜித் முன்வைக்கும் யோசனை
மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாக நாடு முழுவதும் மின்விசை ஆற்றல் மையங்கள் நிறுவப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் நாடு முழுவதும் ஆடைத் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன.
வருமானம் கிடைக்கும்..
அதன் காரணமாக நாட்டுக்கு பெருந்தொகை அந்நியச் செலாவணி வருமானம் கிடைக்கத் தொடங்கியது. அதே போல் இப்போது எமது நாட்டில் மின்சார வாகன தொழிற்சாலைகள் நிறுவப்பட வேண்டும்.

அதன் மூலம் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து, எரிபொருள் இறக்குமதி செலவு குறையும்.
அத்துடன் உள்ளூர் மின்சார வாகன உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசாங்கம் புதியவழிமுறைகளைக் கண்டறிவதில் கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
You may like this..