சுபநேரத்தில் நாட்டை அநுரவிற்கு கொடுத்த மக்கள்..! கடுமையாக விமர்சித்த சஜித்
சுபநேரத்தில் நாட்டை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கொடுத்து விட்டு மக்கள் தற்போது வாழ்க்கை போராட்டங்களை எதிர்கொள்வதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்களுடன் நேற்று(26.03.2025) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“அரசாங்கத்திற்கு அதிகாரம் கிடைத்தும் அதனை முறையாக கையாள தெரியவில்லை. தேங்காய் தட்டுப்பாடு மற்றும் அரிசித் தட்டுப்பாடு குறித்து பேசும்போது அரசாங்கம் குரங்குகள் மீதும் நாய்கள் மீதும் பழி சுமத்துகின்றது.
கேள்விக்குறியாகியுள்ள தேசியப் பாதுகாப்பு
இதற்கு காரணம் இந்த நாட்டை அரசாங்கத்தால் ஆள முடியாது என்பதாகும். அவர்கள் பேசும் அளவுக்கு நடைமுறையான ஆளும் திறன் அவர்களிடம் இல்லை.
அத்துடன், நாட்டின் தேசியப் பாதுகாப்பும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. நீதிமன்றத்தில் நடந்த கொலை தொடர்பான சந்தேகநபர் இன்னும் கைது செய்யப்படவில்லை. கடந்த 3 மாதங்களில் மட்டும் 22இற்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன.
பொதுமக்கள் தற்போது பாதுகாப்பு இன்மையால் அச்சத்தில் உள்ளனர். பொலிஸ்மா அதிபர் தானாகவே முன்வந்து முன்னிலையாகும் வரை அரசாங்கத்தால் அவரை கைது செய்ய முடியாமல் போனது.
இது போன்ற ஒரு நிலையில் தேசிய பாதுகாப்பு உள்ள போது எம்மால் முன்னோக்கி பயணிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |