சர்வதேச நாணய நிதியத்தின் பொம்மையாக செயற்படும் அரசாங்கம்: சஜித் பகிரங்கம்
பொதுமக்கள், அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்த பின்னர், அவர் பொதுமக்களை தவறாக வழிநடத்துவாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்
மின்சார கட்டணங்களை 66 வீதத்தால் குறைப்பது, பொருட்களின் விலையைக் குறைப்பது மற்றும் கடவுச்சீட்டுக்கள் தொடர்பான தாமதங்களைத் தீர்ப்பது ஆகிய வாக்குறுதிகள் நிறைவேறவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அறிக்கைகளை வெளியிட்டு, பொதுமக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
நிதி அழுத்தங்கள்
நிதி அழுத்தங்களால் பாதிக்கப்பட்ட பலருக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாடாளுமன்ற பெரும்பான்மை தேவையில்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதிய மதிப்பாய்வு கூட ஒத்திவைக்கப்படுவதால், வாக்குறுதியளிக்கப்பட்ட வரி குறைப்புகள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.
இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு பொம்மையை போன்று அரசாங்கம் செயற்படுவதாக சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam