சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் தகவல்
கச்சா எண்ணெயின் தொடர்ச்சியான விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை இந்த வாரத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
CPC Commercial Management & Refinery officials met me this morning to discuss the cargo plans for September to December & refinery operations. CPC hopes to commence refinery operations this week to operate without any interruptions & a Continuous supply of Crude Oil. pic.twitter.com/NDb4IbQOhg
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 17, 2022
கச்சா எண்ணெய் இறக்குமதி
இந்த பதிவில்,இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளை இன்று (17) காலை சந்தித்து கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான திட்டங்கள் குறித்தும் அங்கு விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்,எரிசக்தி அமைச்சராக கஞ்சன விஜேசேகர நியமிக்கப்பட்டதன் பின்னர், சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் நான்கு தடவைகள் மூடப்பட்டுள்ளதாக ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கடந்த மூன்று நாட்களாக சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
| எரிபொருள் விலையை 70 ரூபாவினால் குறைக்கலாம்: ஆனந்த பாலித | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        