சர்வதிகார ஜனாதிபதி முறை இலங்கை தீவின் சாபக்கேடு - சபா குகதாஸ்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இலங்கை நாட்டின் ஒரு சாபக்கேடு என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் (Saba Kugadas) தெரிவித்துள்ளார்.
அவரால் இன்றையதினம் (21.08.2024) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும்,
இதுவரை நாட்டின் பின்னடைவுக்கான செயற்பாடுகளையும் அதனை மேற்கொண்ட தரப்புக்களை பாதுகாப்பதிலும் நிறைவேற்று அதிகாரம் பெரும் பங்கு வகித்துள்ளது.
சர்வாதிகார முறை
தேர்தல் காலங்களில் நிறைவேற்று அதிகாரம் நீக்கப்பட வேண்டும் என்ற கோசம் மேலோங்கி இருந்தாலும் தேர்தல் முடிவடைந்த பின்னர் அவை மறக்கப்பட்டு இருப்பதை விட கூடுதல் அதிகாரங்களை பெற முடியுமா என அதிகாரக் கதிரைக்கு வருபவர்கள் சிந்திக்கின்றார்கள்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்பட்டு ஆட்சிப் பீடத்தில் இருக்கும் போது தவறை ஒத்துக்கொண்டு பதவி விலகும் அரசியல் கலாசாரம் உருவாகினால் மட்டுமே ஊழலையும் ஊழல் கூட்டத்தையும் ஒழிக்கலாம்.
மாறாக சர்வாதிகார முறை தொடர்ந்தால் நாடு ஊழல்வாதிகளின் பாதுகாப்புக் கூடாரமாகவே மாறும். அத்துடன், இனவாதத்தை தணிய விடாது தீயாக எரியவைக்கும்.

நாட்டில் இனவாதம் மேலோங்கி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் நாடு
பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்த பின்னரும் நிறைவேற்று அதிகார ஐனாதிபதி
முறை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பிற்போக்கு சிந்தனை பேரினவாதிகள் மத்தியில்
புரையோடிப் போய் உள்ளது என்றால் நாடு முன்னோக்கி செல்ல வாய்ப்பே இல்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam