தமிழர்களின் அடுத்த தலைமுறை கல்வித் தளத்தில் தம்மைத்தாமே நிலைநிறுத்த வேண்டும்: சிறீதரன் எம்.பி கோரிக்கை(Photos)
சொந்த நாட்டில், தனது இருப்பைத் தக்கவைப்பதற்காக, எல்லாவகையிலும் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள தமிழர்களின் அடுத்த தலைமுறை, கல்வித் தளத்திலும் அறிவுப் புலத்திலும் தம்மைத்தாமே நிலைநிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு செய்யாவிடின் எமது இனம் இருப்பழிந்து போய்விடும் என்கிற உண்மையை பிள்ளைகளுக்கு உணர்த்துவதன் மூலம் ஆளுமைமிக்க அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டிய சமூகக் கடமை பாடசாலைகளுக்கு உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சி - சிவநகர் அ.த.க.பாடசாலையில் இன்று(03.11.2023) நடைபெற்ற தேசியமட்ட சாதனையாளர் மதிப்பளிப்பு மற்றும் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தேசியமட்ட வெற்றி
மேலும் தெரிவிக்கையில்,
“பெளதீக வளப் பற்றாக்குறைகள் மிகுந்த நிலையிலும், திறமைக்கு எதுவும் தடையல்ல என்பதை உறுதி செய்பவர்களாக, தமது பள்ளியின் பெயரையும் ஊரின் பெயரையும் உயர்த்துவதற்காய் உழைப்பவர்களாக உள்ள சிவநகர் அ.த.க பாடசாலையின் மாணவர்கள் ஏனையோருக்கு முன்னுதாரணமானவர்கள்.
எத்தனையோ இடர்களையும் தடைகளையும் தாண்டி, வசதிவாய்ப்புகள் நிறைந்த பல பாடசாலைகளால் நெருங்க முடியாதிருக்கும் தேசியமட்ட வெற்றியை, தொடர்ச்சியாக தேசியமட்ட கபடிப் போட்டியில் பெற்றுவரும் இப்பிள்ளைகளினது மனோதிடத்தையும், அதிபர், ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், பெற்றோர்களது அயராத உழைப்பையும் பாராட்டுகிறேன்.
பாடசாலையின் அதிபர் இளவேந்தி நிர்மலராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கிளிநொச்சி தெற்கு கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் பாலசிங்கம் வாசுதேவன், உருத்திரபுரீசுவரர் சிவாலய பிரதமகுரு சிவஸ்ரீ. அமிர்த ஸ்ரீஸ்கந்தராஜக் குருக்கள், ஏனைய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கிராம அலுவலர், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் உட்பட பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் நாடுகளில் இருந்து வருபவர்கள் கொழும்பில் நாட்களை செலவிட வேண்டாம்! பகிரங்க கோரிக்கை (Video)

தமிழர்களை வெட்டுவேன் என்ற அம்பிட்டிய தேரருக்கு பகிரங்க சவால்! முடிந்தால் நாடாளுமன்ற மைதானத்திற்கு வரவும்









பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
