அமெரிக்க ஜனாதிபதிக்கு விமானத்தில் பறந்து இரகசிய மிரட்டல் விடும் புடின் (Video)
அமெரிக்க ஜனாதிபதியை விமானத்தில் பறந்து இரகசிய மிரட்டல் விடும் வகையில் புடின், ரஷ்ய வான் பரப்பில் அணு ஆயுதங்களுக்கான கட்டளைகளை பிறப்பிக்கும் விமானங்களில் ரஷ்ய வான் பரப்பில் மூன்று தடவைகள் வலம் வந்துள்ளார் என வரலாற்றுத்துறை ஆய்வாளர் மயூரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன், ரஷ்ய விவகாரம் தொடர்பாக நேட்டோ நாடுகளுடனான ஆலோசனை கூட்டம் , ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தலைவர்களுடனான பேச்சுவார்த்தையினை மேற்கொண்டுள்ளார்.
இவ் ஜி7 பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் Air Force Boeing VC-25 விமானத்தில் சென்றுள்ளார்.
இந்த விமானம் அமெரிக்க ஜனாதிபதிகள் தன்னுடைய நாட்டில் இக்கட்டான சூழ்நிலைகள் வருகின்ற பொழுது, ஒரு நாடு தனது அணு ஆயுதத்தை பாவிக்கின்ற போது கட்டளைகளை பிறப்பிக்கும் ஒரு விமானமாகும்.
இந்த விமானத்தில் பயணம் செய்தே ஜோ பைடன் ஜி7 மாநாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா, அணு ஆயுத தாக்குதலுக்கு உத்தரவு கொடுகின்ற அல்லது அதற்கு முன் மேற்கொள்ளும் முன்னேற்பாடுகளை செய்வதான நிகழ்வு ஒன்றை செய்துள்ளனர்.
இதை Air Technical Move Block என்ற நிறுவனம் ஒழுங்குப்படுத்தி இருந்தது. இந் நிறுவனமானது முக்கிய பிரமுகர்களை கொண்டு செல்லும் விமானங்களை ஒழுங்குப்படுத்தும் ஓர் நிறுவனமாகும்.
இதன்போது புடின் அவர்கள் IL-96-300PU என்ற விமானத்தில் பறந்து செல்ல, அதற்கு முன் TU214PU என்ற வான் கட்டுப்பாட்டு விமானம் பறந்து சென்றுள்ளது.
இவ் விமானம் முப்படைகள் தளபதிகளும் செல்லும் விமானமாகும். நாடு இறுக்கமான சூழ்நிலையில் வரும் போது முப்படை தளபதிகளும் இவ் விமானத்தில் இருந்தே கட்டளைகளை பிறப்பிப்பர்.
அத்தோடு ஜனாதிபதி செல்லும் விமானத்திற்கு முன்னர் ஒரு விமானம் செல்லும் IL-96-400PU தகவல் சேகரிக்கும் ஒரு விமானம் இந்த விமானமும் இந் நிகழ்வில் பறந்து சென்றுள்ளது.
இறுதியாக Doomsday என்ற விமானம் இந்த விமானம், அணு ஆயுதத்தை பாவிப்பதற்கான உத்தரவை வழங்கும் விமானமாகும்.
இவ் விமானம் உலகில் இரண்டு நாடுகளிடம் மட்டுமே உள்ளது. ஒன்று ரஷ்யா இரண்டு அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.
இந் நிகழ்வின் போது ரஷ்ய விமானம், ரஷ்யாவில் இருந்து மொஸ்கோவை அணிவகுத்து சென்று மூன்று தடவைகள் ரஷ்யாவை வலம் வந்துள்ளது. இதில் ஒரு விமானம் கிழக்கு கஜகஸ்தான் சென்று மீண்டும் ரஷ்ய அதிபர் மாளிகை வரை சென்று தரையிறங்கியுள்ளது.
எனவே இதன்மூலம் ரஷ்யா விடுத்துள்ள அறிவித்தலானது “நாங்கள் அணு ஆயுதம் பிறப்பிப்பதற்கும் தயாராக இருக்கின்றோம் என்று வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.