போர் நிறுத்தத்தையும் பொருட்படுத்தாத ரஸ்யா! தொடர்ந்தும் எறிகனை தாக்குதல்! (காணொளி)
போர் நிறுத்த அறிவித்தலுக்கு மத்தியிலும்; உக்ரைன் நகரில் ரஸ்ய படைகள் தொடர்ந்தும் எறிகனை வீச்சுகளை தீவிரப்படுத்தியுள்ளதாக மரியுபோல் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் துறைமுக நகரம் "மிகவும் கடினமான முற்றுகை நிலையில்" இருப்பதாக முதல்வர் வாடிம் போய்சென்கோ கூறியுள்ளார்.
குடியிருப்புத் தொகுதிகள் மீது ரஸ்ய படையினரின் இடைவிடாத எறிகனை தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
அத்துடன் விமானங்கள் குடியிருப்புப் பகுதிகளில் குண்டுகளை வீசுவதாக அவர் கூறியுள்ளார்.
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கடல் இணைப்பில் இருந்து உக்ரைனை துண்டிக்க ரஸ்ய துருப்புக்கள் முயற்சித்து வரும் நிலையில், துறைமுக நகரம் பல நாட்களாக கடுமையான எறிகனை தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.
போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட போதிலும் ரஸ்ய படைகள் மரியுபோல் மீது தொடர்ந்து எறிகனை தாக்குதல் நடத்துவது, பொதுமக்களை பெருமளவில் வெளியேற்றும் முயற்சியை தடுத்துள்ளது.
இதற்கிடையில் கடந்த 10 நாட்களில் ரஸ்ய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரேயொரு நகரான கேர்சன் நகரவாசிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று சில குடியிருப்பாளர்கள் மொஸ்கோவின் மனிதாபிமான நடவடிக்கைகளை நிராகரித்தனர்.
அத்துடன் தேசபக்தி கோசங்களை எழுப்பினர். ரஸ்யாவின் இராணுவத்தை நோக்கி, 'வீட்டிற்குச் செல்லுங்கள், நீங்கள் இங்கு எங்களுக்கு வேண்டாம், நாங்கள் உக்ரைனில் வாழ விரும்புகிறோம். ரஸ்யாவுடன் அல்ல, ஐரோப்பாவுடன் வாழ விரும்புகிறோம்' என்று அவர்கள் கோசமிட்டனர்.
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri