25வது நாளில் உக்ரைன் போர்க்களம்! தொடரும் புடின் - ஸெலென்ஸ்கியின் பலப்பரீட்சை (காணொளி)
உக்ரைன் போரின்போது உக்ரைன் வான்வெளியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ரஷ்யா தோல்வி கண்டுள்ளதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் மரியுபோல் திரையரங்கின் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகனை வீச்சு காரணமாக அந்த அரங்குக்குள் சிக்குண்டவர்களை மீட்கும் பணி இன்னும் தொடர்கிறது.
இதற்காக உக்ரைன் மற்றும் ரஷ்ய படையினருக்கு இடையிலான வீதிச்சண்டைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மைக்கோலிவ் நகரம் மீது ரஷ்ய விமானத் தாக்குதல்கள் நேற்றைய நாள் முழுவதும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் உக்ரைனின் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி, ரஸ்யாவின் வங்கி இயக்கங்களை முடக்குமாறு சுவிட்சர்லாந்தை வலியுறுத்தியுள்ளார்.
நேற்று சுவிட்சர்லாந்து மக்களுக்கு உரையாற்றும்போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
அத்துடன் தாமதமின்றி பேச்சுவார்த்தை மேசைக்கு வருமாறு அவர் ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும் யதார்த்தமற்ற திட்டங்களுடன் வருவதன் காரணமாகவே சமாதான பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று ரஷ்ய ஜனாதிபதி புடின், ஜேர்மன் அதிபரிடம் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க உக்ரைனில் இருந்து 3.3 மில்லியனுக்கும் அதிகமான ஏதிலிகள் மேற்கு எல்லை வழியாக வெளியேறியுள்ளனர்.
25வது நாளில் உக்ரைன்
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam