ஐ.நா. மனித உரிமை சபையிலிருந்து ரஷ்யா இடைநீக்கம் (Video)
உக்ரைன் மீது படையெடுத்து பேரழிவை ஏற்படுத்தியதாக கூறி, ரஷ்யாவை ஐ.நா. மனித உரிமை சபையிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக ஐ.நா. பொதுச் சபை தெரிவித்துள்ளது.
ஐ.நா. பொதுச் சபையில் 193 நாடுகள் உள்ளன. இதில், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளும் நாடுகளின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தால்தான் மனித உரிமை சபையில் இருந்து ரஷ்யாவை இடைநீக்க முடியும் என்ற நிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
ரஷ்யாவை மனித உரிமை சபையில் இருந்து வெளியேற்ற அமெரிக்கா முன்னெடுத்த இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் விழுந்தன.
இந்தியா உட்பட 58 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,