ட்ரோன் தாக்குதல்களால் உயரும் ரஷ்யப் படை உயிரிழப்புகள்: உக்ரைன் இராணுவம் அதிரடி தகவல்
உக்ரைன் உடனான போரில் ரஷ்ய வீரர்களின் உயிரிழப்பு சதவீதம் கடந்த மார்ச் மாதத்தில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக உக்ரைன் ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன.
உக்ரைனின் கணக்கீட்டின்படி, கடந்த மாதத்தில் மட்டும் 35,351 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர்.
இதில் 96 சதவீத இழப்புகள் ட்ரோன் (Drone) தாக்குதல்கள் மூலம் ஏற்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூடு மூலம் நிகழ்ந்துள்ளதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
ட்ரோன் உற்பத்தி
ரஷ்யா கைப்பற்றும் ஒவ்வொரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பிற்கும் சுமார் 316 வீரர்களைப் பலிகொடுக்க வேண்டியிருப்பதாகவும், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் இருமடங்கு அதிகம் என்றும் உக்ரைன் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களுக்கு உக்ரைனின் அதீத ட்ரோன் உற்பத்தியே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
மார்ச் மாதத்தில் மட்டும் நாள் ஒன்றுக்குச் சுமார் 11,000 ட்ரோன் பயணங்கள் மூலம் 1.5 இலட்சத்திற்கும் அதிகமான இலக்குகளை உக்ரைன் தாக்கியுள்ளது.
தாக்குதல்
மேலும், ரஷ்யாவின் உட்பகுதிகளைத் தாக்கும் வகையில் 300 கி.மீ மற்றும் 850 கி.மீ தூரம் வரை பாயக்கூடிய அதிநவீன ஏவுகணைகளையும் உக்ரைன் உருவாக்கி வருகிறது.

ரஷ்யாவால் தனது இழப்புகளை ஈடுகட்டும் வகையில் வீரர்களைத் திரட்ட முடியாமல் திணறி வருவதாகவும், இது ரஷ்யாவிற்குப் பெரும் பலவீனமாக மாறும் என்றும் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போது போர்க்களத்தில் "மூலோபாய முன்முயற்சியை" உக்ரைன் கைப்பற்றியுள்ளதாகவும், இதன் மூலம் ரஷ்யாவின் பெரிய அளவிலான தாக்குதல்களை முறியடிக்க முடிவதாகவும் உக்ரைன் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்: லெபனான் பாதுகாப்புப் படை வீரர்கள் 13 பேர் பலி - லெபனான் ஜனாதிபதி கடும் கண்டனம்
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri